Sunday, January 25, 2009

மூன்றாவது முறை பாய்ந்த மின்சாரம்

குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தார் ஹென்றி ஷாரியர். பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கவனிக்காமல் விசில் கொடுத்ததால் அம்முதியவர் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றைக்கு தீர்ப்பு வெளியிடும் நாள். ஹென்றியை ஒரு முறை கூர்ந்து பார்த்த ஜட்ஜ், கவனக்குறைவால் ஒரு உயிர் பலியானதற்கு காரணமான கண்டக்டர் ஹென்றி ஷாரியற்கு மரண தண்டனை வழங்கினார்.

பிரான்ஸ் நாட்டு வழக்கப்படி, அவரை மின்சாரம் பாய்ச்சும் கூடத்திற்கு அழைத்து சென்றனர். மின்சாரம் பாய்ச்சும் அறையில் இரும்பு நாற்காலிகள் எலெக்ட்ரிக் வயர்களால் பிணைக்கப்பட்டு இருந்தன. அந்த அறை ஓரத்தில் ஒரு வாழைப்பழ தோல் கிடந்தது. ஹென்றியை நாற்காலியில் அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். என்ன ஒரு ஆச்சர்யம்! ஹென்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆதலால் தவறு அவருடையதல்ல என்று கருதி அவரை விடுவித்தார்கள்.

ஓரிரு வாரங்கள் கடந்தபின் மருபடியும் ஒரு பெண்மணி ஹென்றியின் கவனக்குறைவால் கால் தவறி விழுந்து உயிர் இழந்தார். மறுபடியும் அவர்க்கு அதே தண்டனை வழங்கப்பட்டு அதே அறைக்கு கொண்டுச்சென்றனர். இம்முறையும் வாழைப்பழ தோல் ஒரு ஓரத்தில் கிடந்தது. அவரை அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். இந்த முறையும் அவர்க்கு எந்த வித பாதிப்பும் இல்லை. மீண்டும் விடுவித்தார்கள்.

அடுத்த நாள் ஒரு சிறுவன் மன உளைச்சலால் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான். ஆயினும் பழைய குற்றங்களால் ஹென்றியை குற்றவாளி கூண்டில் நிறுத்தினார்கள். தீர்ப்பும் அவர்க்கு எதிராகவே வழங்கப்பட்டது.

அவரை அந்த அறைக்கு அழைத்து சென்றனர். இம்முறை அந்த வாழைப்பழ தோல் அவ்விடத்தில் இல்லை. அவரை அந்த நாற்காலியில் அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். அதிர்ந்தவரின் உடலில் இருந்து பரிதாபமாக உயிர் பிரிந்தது.

என் கேள்வி, இரண்டு முறை மின்சாரத்தை பாய்ச்சியும் எந்த வித அதிர்வுக்கும் ஆளாகதவர் மூன்றாம் மூறை மின்சாரத்தால் தாக்கப்பட்டது ஏன்?

ஏன்?

ஏன்?

ஏன்?

கடந்த
இரண்டுமுறையும் தவறு அவருடையதாதலால் அவர் BAD CONDUCTOR. இறுதி முறை அவர் GOOD CONDUCTOR..

அன்புடன்
இரா.பிரபுசங்கர்

Monday, January 19, 2009

ஆன்மீகவாதியும் அரசியல்வாதியும்

ஆன்மீகவாதியும் அரசியல்வாதியும் ஒரு விழாவில் கலந்து கொண்டனர் . அரசியல்வாதி சிரிக்கச் சிரிக்கப் பேசி கூட்டத்தை குதூகலப் படுத்தினார்.
"நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணம் எப்போது என்று கேட்டால் அது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோது ....இதில் ஒரு உண்மை என்னவென்றால் அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவி" என்றார் அவர் தன் பேச்சின் இடையே.

அரசியல்வாதி இப்படிப் பகிரங்கமாகச் சொன்னதைக் கேட்டு கூட்டம் அதிர்ச்சியடைந்தது .
சற்று இடைவெளி கொடுத்து அந்த அரசியல்வாதி மீண்டும் சொன்னார். ஆம்! அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவிதான். என் தந்தையின் மனைவி. அதாவது என் தாய். தாயின் அரவணைப்பில் மகிழாத குழந்தை உண்டோ?
கூட்டம் ரசித்து ஆர்பரித்து மகிழ்ந்தது.
அரசியல்வாதியின் பேச்சைக் கூட்டம் ரசித்து கண்டு ஆண்மீகவாதிக்கும் ஜோக் அடிக்கும் ஆசை வந்தது.
ஒரு கூட்டத்தில் தேவாரம், திருவாசகம் பற்றியெல்லாம் பேசிவிட்டு இடையில் அரசியல்வாதி சொன்ன ஜோக்கை சொல்லத் தொடங்கினார் .

நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணம் எப்போது என்று கேட்டால் அது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோது ....இதில் ஒரு உண்மை என்னவென்றால் அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவி" கூட்டம் அதிர்ச்சியடைந்தது.
மீண்டும் பேச தொடங்கினார். "அந்தப் பெண் யார் என்றால் ..."
என்ன துரதிருஷ்டம்! ஜோக்கை எப்படி முடிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. சற்றுத் தடுமாறிய அவர், அந்தப் பெண் யார் என்பது எனக்கு மறந்து போய் விட்டது. அது அந்த அரசியல்வாதிக்குத் தான் தெரியும் என்று அவர் பெயரை சொல்லி சொன்னார். ஈராக் சென்ற புஷ் போல ஆனார் சாமியார்.

Sunday, January 18, 2009

எழில் கொஞ்சும் வீராணம்

எழில் கொஞ்சும் வீராணம்

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி' என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?





ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.


ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.
அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.
ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?


இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.


இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.

இந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வௌியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.

"வடவாறு பொங்கி வருது வந்து பாருங்கள், பள்ளியரே! வெள்ளாறு விரைந்து வருது வேடிக்கை பாருங்கள், தோழியரே! காவேரி புரண்டு வருது காண வாருங்கள், பாங்கியரே!"

சல்வார் 2009