காலை எழுந்ததுமே தோட்டத்தில் குழி நோண்டிக் கொண்டிருந்தவளை கவனித்தான் கண்ணன் . என்ன சுசி.. ஏன் குழி நோண்டற.. ..
திரும்பியவளைக் கண்டதும் அதிர்ந்தான் .
ஏன் அழற சுசி..
ம் என்னோட கோல்ட்பிஷ் செத்துப் போச்சு அதான்.....
அவளை சமாதானப் படுத்தியபடியே கேட்டான்.. சரி சுசி.. அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய குழி..
ம்.. அது உன் செல்லப் பூனையோட வயித்துலள்ள இருக்கு.. ..
Wednesday, December 16, 2009
Sunday, December 13, 2009
திமுக :ஒரு பார்வை
திமுகவை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள்கூட பிற கட்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் வெளிப்படையாக ஆதரிக்க முடியாது.மற்ற கட்சியினுடைய செயல்பாடுகள் அப்படி.தமிழகத்தில் எந்த ஒரு உருப்படியான விஷயம் நடந்தாலும் நடந்திருந்தாலும் அது திமுகவினுடையதாகவே இருக்கும். இன்றைக்கு கலைஞர் அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்துக் கொண்டே போகிறார். உலகளாவிய பிரச்சினைகள் தமிழ்கத்தினையும் பாதித்திருந்தாலும் , தமிழக அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எவரும் கிடையாது. துணை முதலமைச்சரான பிறகு ஸ்டாலினின் செயல்பாடுகள் பிற கட்சியினரை மட்டுமல்ல , திமுகவினரையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளன.ஆட்சிக்கும் கட்சிக்கும் சம காலத்தில் வலு கொடுத்து வரும் ஸ்டாலின், தாய்க்குலங்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவராக உள்ளார். கலைஞரின் வாரிசுகளாலேயே திமுக சிதறிவிடும் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கி, திமுக இன்றைக்கு வலுபெற்று நிற்பது அவர்களால்தான் என்ற நிலை உருவாகியுள்ளது.
கட்டுக்கோப்பான கோட்டைபோல் திமுக காட்சியளித்தாலும் , உண்மையில் திமுக தனது உண்மையான தொண்டர்களை இழந்து விட்டது. திமுகவின் ஆணிவேரே சிங்கிள் டீக்கு வேலை செய்யும் தொண்டர்களும் , மிகச்சிறந்த பேச்சாளர்களும்தான் . இன்றைக்கு இந்த இரண்டு பலங்களும் இல்லாமல் பணபலத்தை மட்டும் நம்பியிருப்பது மிகப்பெரும் பலவீனம்.
பணபலம் படைத்தவர்கள் மட்டுமே இன்றைக்கு அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்பதுதான் வேதனையான உண்மை. இதற்க்கு மிகச்சிறந்த உதாரணங்கள் JK ரித்திஷும் ஆலந்தூர் பாரதியும் .ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திமுக் அமைச்சர்கள், ஒன்றிய செயலாளர்கள், கவுன்சிலர்கள் மட்டுமே இன்றைக்கு எந்த ஒரு தொழிலையும் செய்ய முடியும் என்னுமளவுக்கு எந்த ஒரு தொழிலையும் மற்றவர்களுக்கு விட்டுவைப்பதில்லை .கல்லூரிகள், பள்ளிகள், கேபிள், தொழிற்சாலைகள் என எல்லாமும் இவர்கள் வசமே உள்ளது. இவர்களின்
செயல்பாடுகள் மக்களுக்கு பெரும் அதிருப்தியை அளித்திருக்கிறது. சரியான் முறையில் இவர்களை ஒழுங்கு படுத்தாவிட்டால் நிச்சயம் திமுகவிற்கு இது மிகப்பெரும் சரிவை ஏற்படுத்தும்.
இவை ஒருபுறமிருக்க படித்தவர்களின் கட்சி என்ற இமேஜை கலைஞர் தனது செயல்பாடுகளால் தூள்தூளாக்கிகொண்டிருக்கிறார். இந்த வயதில் புகழுக்கும், விருதுக்கும் அவர் அலைவது திமுகவினருக்கே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுகளையும், விழாக்களையும் அவர் தவிர்ப்பது சாலச்சிறந்தது.அவரின் மிகச்சிறந்த செயல்பாடுகளை மற்றவர்கள் புகழ அவகாசம் கூட கொடுக்காமல் அவர்களுக்குமுன் இவரே இவரை புகழ்ந்துகொள்வது அபத்தத்தின் உச்சம்.
திமுகவின் பேரணி, மாநாடுகளுக்குப் பெருமையுடன் சொந்த செலவில் செல்லும் இளைஞர்களை நான் என் சிறு வயதில் கண்டிருக்கிறேன். கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர்களை இன்றைக்கு எந்த கட்சியிலும் பார்க்க முடிவதில்லை. இது காலத்தின் மாற்றமா அல்லது அரசியல் கட்சிகளின் கோலங்களின் விளைவால் வந்த மாற்றமா என்று தெரியவில்லை. உலகம் முழுவதும் அரசியலில் முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்க நாம் மட்டும் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் அரசியலையே மாற்றிப் படைத்த திமுகவால் மட்டுமே இந்த நிலையையும் மாற்ற முடியும். தளபதியின் காலத்திலாவது தமிழக அரசியல் மாற்றமடைய வேண்டும்..

Monday, June 15, 2009
Tuesday, February 10, 2009
அத்தனையும் மறந்து போனது...
யோசித்துப் பார்க்கையில்
என் மீதான காதல்
குறைவுதான் உனக்கு.
அறிவுசார்ந்து இயங்குகையில்
எப்போதும் சண்டையிடுகின்றாய்.
உணர்ச்சிவசப்படும்போது
காதலுடன் காமுறுகிறாய்
உன் அப்பாவின் மூட்டு வலி
பக்கத்து வீட்டு பப்பி உன்
செருப்பைக் கடித்தது
புஷ்பா தர மறந்த மீதி
இரண்டு ரூபாய் சில்லறை
இப்படியான அதி முக்கிய விஷயங்கள்
எப்போதும் சுவராஸ்யமாக இருக்கிறது உனக்கு.
அலுவலக ஆடிட் முடித்துக் கொடுத்து
நிம்மதிப் பெருமூச்சு விடுவதை
மொக்கை என சலித்துக் கொள்கிறாய்
உன் கனவில் எப்போதும்
தவறு செய்பவனாகவே நான்.
சூர்யாவின் சிக்ஸ்பேக்-ஐ சிலாகித்துப் பேசும் நீ
கனவில்கூட பெண்களை ரசிக்க விட்டதில்லை.
உன்னிடம் சொல்லாமல் சலூனுக்குக்கூட
செல்ல முடிந்ததில்லை என்னால்.
தொலை பேசும்போது முதலில் bye
சொன்னதற்காக பலமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.
உன் தந்தையிருக்கும்போது SMS அனுப்புவது
கூட இயலாமல் போகிறது உனக்கு
இத்தனை விஷயங்களும் மறந்து போனது
என் தந்தையின் காலை
நீ அமுக்கி விட்டபோது.

Sunday, February 8, 2009
"நீ ரொம்ப நல்லவன்டா"
பேருந்து பயணத்தின்போது எப்போதும்
சண்டையிடுபவனாகவே இருந்திருக்கிறேன்
நான்.
நடத்துனருக்காக பயணியிடம், பயணிகளுக்காக
நடத்துனரிடம், இப்படி ஒரு காரணம் அகப்படும்.
உன்னுடன் பயணிக்கையில் கடுஞ்சொல் கூறுவோரிடம்கூட
மெலிதான புன்னகையுடன் "ஸாரி" என்கிறேன்.
"ரொம்ப பொறுமைசாலிடா நீ" என கூறுகிறாய்.
நண்பர்கள் குழாமில் எப்போதும்
செலவு செய்பவனாகவே இருந்திருக்கிறேன்
நான்.
உன்னுடன் உணவருந்துகையில் இரண்டு ரூபாய்
டிப்ஸ் வைக்கிறேன் நான்.
"ரொம்ப சிக்கனம்" என்று பெருமிதத்துடன்
இன்னொரு இரண்டு ரூபாய் டிப்ஸ் வைக்கிறாய் .
நினைவு தெரிந்து கோயிலுக்கு
செல்லாதவனாகவே இருந்திருக்கிறேன்
நான்.
உன்னுடன் வரும்போது என் பெயரில் அர்ச்சனை செய்யும் உன்னை அதிசயித்து பார்க்க பக்தியுடன் பார்ப்பதாக நினைத்து
"நீ ரொம்ப நல்லவன்டா " என்று விபூதி இடுகின்றாய் எனக்கு.
WWF மல்யுத்தத்தை எப்போதும்
தவறவிடாமல் பார்ப்பவனாகவே இருந்திருக்கிறேன்
நான்.
உன்னுடன் சினிமா பார்க்கையில் மென்சோகக் காட்சிகளுக்கு
கண்ணீர் சிந்தியதைக் கண்டு
"நான் ரொம்ப லக்கிடா" என்று கண் துடைத்து
என் தோள் சாய்ந்து அழுகிறாய்.
உன்னுடனான என் சுபாவம் குறித்து
நண்பர்களின் கேலிக்கு அஞ்சியதில்லை
நான்.
வாழ்நாள் முழுக்க இப்படியே இருந்து விடுவோமோ
என்று கவலைப்படத் தொடங்குகின்றேன் இப்போது.

Sunday, January 25, 2009
மூன்றாவது முறை பாய்ந்த மின்சாரம்
குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தார் ஹென்றி ஷாரியர். பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கவனிக்காமல் விசில் கொடுத்ததால் அம்முதியவர் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றைக்கு தீர்ப்பு வெளியிடும் நாள். ஹென்றியை ஒரு முறை கூர்ந்து பார்த்த ஜட்ஜ், கவனக்குறைவால் ஒரு உயிர் பலியானதற்கு காரணமான கண்டக்டர் ஹென்றி ஷாரியற்கு மரண தண்டனை வழங்கினார்.
பிரான்ஸ் நாட்டு வழக்கப்படி, அவரை மின்சாரம் பாய்ச்சும் கூடத்திற்கு அழைத்து சென்றனர். மின்சாரம் பாய்ச்சும் அறையில் இரும்பு நாற்காலிகள் எலெக்ட்ரிக் வயர்களால் பிணைக்கப்பட்டு இருந்தன. அந்த அறை ஓரத்தில் ஒரு வாழைப்பழ தோல் கிடந்தது. ஹென்றியை நாற்காலியில் அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். என்ன ஒரு ஆச்சர்யம்! ஹென்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆதலால் தவறு அவருடையதல்ல என்று கருதி அவரை விடுவித்தார்கள்.
ஓரிரு வாரங்கள் கடந்தபின் மருபடியும் ஒரு பெண்மணி ஹென்றியின் கவனக்குறைவால் கால் தவறி விழுந்து உயிர் இழந்தார். மறுபடியும் அவர்க்கு அதே தண்டனை வழங்கப்பட்டு அதே அறைக்கு கொண்டுச்சென்றனர். இம்முறையும் வாழைப்பழ தோல் ஒரு ஓரத்தில் கிடந்தது. அவரை அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். இந்த முறையும் அவர்க்கு எந்த வித பாதிப்பும் இல்லை. மீண்டும் விடுவித்தார்கள்.
அடுத்த நாள் ஒரு சிறுவன் மன உளைச்சலால் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான். ஆயினும் பழைய குற்றங்களால் ஹென்றியை குற்றவாளி கூண்டில் நிறுத்தினார்கள். தீர்ப்பும் அவர்க்கு எதிராகவே வழங்கப்பட்டது.
அவரை அந்த அறைக்கு அழைத்து சென்றனர். இம்முறை அந்த வாழைப்பழ தோல் அவ்விடத்தில் இல்லை. அவரை அந்த நாற்காலியில் அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். அதிர்ந்தவரின் உடலில் இருந்து பரிதாபமாக உயிர் பிரிந்தது.
என் கேள்வி, இரண்டு முறை மின்சாரத்தை பாய்ச்சியும் எந்த வித அதிர்வுக்கும் ஆளாகதவர் மூன்றாம் மூறை மின்சாரத்தால் தாக்கப்பட்டது ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
கடந்த
இரண்டுமுறையும் தவறு அவருடையதாதலால் அவர் BAD CONDUCTOR. இறுதி முறை அவர் GOOD CONDUCTOR..
அன்புடன்
இரா.பிரபுசங்கர்

Monday, January 19, 2009
ஆன்மீகவாதியும் அரசியல்வாதியும்
ஆன்மீகவாதியும் அரசியல்வாதியும் ஒரு விழாவில் கலந்து கொண்டனர் . அரசியல்வாதி சிரிக்கச் சிரிக்கப் பேசி கூட்டத்தை குதூகலப் படுத்தினார்.
"நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணம் எப்போது என்று கேட்டால் அது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோது ....இதில் ஒரு உண்மை என்னவென்றால் அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவி" என்றார் அவர் தன் பேச்சின் இடையே.
அரசியல்வாதி இப்படிப் பகிரங்கமாகச் சொன்னதைக் கேட்டு கூட்டம் அதிர்ச்சியடைந்தது .
சற்று இடைவெளி கொடுத்து அந்த அரசியல்வாதி மீண்டும் சொன்னார். ஆம்! அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவிதான். என் தந்தையின் மனைவி. அதாவது என் தாய். தாயின் அரவணைப்பில் மகிழாத குழந்தை உண்டோ?
கூட்டம் ரசித்து ஆர்பரித்து மகிழ்ந்தது.
அரசியல்வாதியின் பேச்சைக் கூட்டம் ரசித்து கண்டு ஆண்மீகவாதிக்கும் ஜோக் அடிக்கும் ஆசை வந்தது.
ஒரு கூட்டத்தில் தேவாரம், திருவாசகம் பற்றியெல்லாம் பேசிவிட்டு இடையில் அரசியல்வாதி சொன்ன ஜோக்கை சொல்லத் தொடங்கினார் .
நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணம் எப்போது என்று கேட்டால் அது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோது ....இதில் ஒரு உண்மை என்னவென்றால் அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவி" கூட்டம் அதிர்ச்சியடைந்தது.
மீண்டும் பேச தொடங்கினார். "அந்தப் பெண் யார் என்றால் ..."
என்ன துரதிருஷ்டம்! ஜோக்கை எப்படி முடிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. சற்றுத் தடுமாறிய அவர், அந்தப் பெண் யார் என்பது எனக்கு மறந்து போய் விட்டது. அது அந்த அரசியல்வாதிக்குத் தான் தெரியும் என்று அவர் பெயரை சொல்லி சொன்னார். ஈராக் சென்ற புஷ் போல ஆனார் சாமியார்.

Subscribe to:
Posts (Atom)