யோசித்துப் பார்க்கையில்
என் மீதான காதல்
குறைவுதான் உனக்கு.
அறிவுசார்ந்து இயங்குகையில்
எப்போதும் சண்டையிடுகின்றாய்.
உணர்ச்சிவசப்படும்போது
காதலுடன் காமுறுகிறாய்
உன் அப்பாவின் மூட்டு வலி
பக்கத்து வீட்டு பப்பி உன்
செருப்பைக் கடித்தது
புஷ்பா தர மறந்த மீதி
இரண்டு ரூபாய் சில்லறை
இப்படியான அதி முக்கிய விஷயங்கள்
எப்போதும் சுவராஸ்யமாக இருக்கிறது உனக்கு.
அலுவலக ஆடிட் முடித்துக் கொடுத்து
நிம்மதிப் பெருமூச்சு விடுவதை
மொக்கை என சலித்துக் கொள்கிறாய்
உன் கனவில் எப்போதும்
தவறு செய்பவனாகவே நான்.
சூர்யாவின் சிக்ஸ்பேக்-ஐ சிலாகித்துப் பேசும் நீ
கனவில்கூட பெண்களை ரசிக்க விட்டதில்லை.
உன்னிடம் சொல்லாமல் சலூனுக்குக்கூட
செல்ல முடிந்ததில்லை என்னால்.
தொலை பேசும்போது முதலில் bye
சொன்னதற்காக பலமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.
உன் தந்தையிருக்கும்போது SMS அனுப்புவது
கூட இயலாமல் போகிறது உனக்கு
இத்தனை விஷயங்களும் மறந்து போனது
என் தந்தையின் காலை
நீ அமுக்கி விட்டபோது.
Tuesday, February 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
wow t s good............. she s rly lucky prabhu....who s tat ? i wanna c her name in u r next poetry....
Post a Comment